இந்தியா

2 ஆவது முறையாகவும் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த தேவகுமார்,

சீன அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் இரண்டாவது முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருது பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டம் கிருஷ்ண பாளையத்தை சேர்ந்தவர் தேவகுமார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சீனாவில் ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். சிறந்த முறையில் மிக எளிதாக பாடம் எடுக்கும் இவரது திறமையை பாராட்டி கடந்த  2016 ஆம் ஆண்டே சீன அரசிடம் இருந்து சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்றார்.

இந்நிலையில் மீண்டும், இரண்டாவது முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து உள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஐசக் -சரோஜா தம்பதிகளின் மகனான இவர், சீன அரசிடமிருந்து உயரிய விருதை பெற்றதை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

About முகிலினி

0 கருத்துகள்:

Post a Comment