Header Ads

test

விஜய்யுடன் இணைகிறார் பரியேறும் பெருமாள்!

மெர்சல் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து மூன்றாவது முறையாக அட்லியுடன் இணைந்துள்ளார். இந்த படம் தற்போது தளபதி 63 என அழைக்கப்படுகிறது. 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

படத்தின் சூட்டிங் பொங்களுக்கு பிறகு ஜனவரி 21 ஆம் தேதி துவங்கும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்திற்காக விஜய் பிரத்யேக பயிற்சியாளர் மூலம் விஜய் தனது உடலமைப்பு மாற்றி வருவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போதைய அப்டேட்டின் படி தளபதி 63 படத்தில் நடிகர் கதிர் இணைந்துள்ளார். இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமும், நடிகர் கதிரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பரியேரும் பெருமாள் படத்தில் நடித்து கதிர் தனது சிறப்பான நடிப்பு திறமையை வெளிபடுத்திருந்தார். இதனால் பலரின் பாராட்டுகளை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment: