ஹீரோவாகிறார் சூர்யாவின் மகன்..!

விஜய் , விக்ரம் மகன்களை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் மகனும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல்கள் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வெளிவந்துள்ளது .
சூர்யா- ஜோதிகாவுக்கு தேவ் என்ற ஒரு மகனும் தியா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். மகன் தேவ் தற்போது புதுமுக இயக்குனர் ஒருவர் ஒரு சிறுவன் மற்றும் நாய்க்குட்டிக்கு இடையே உள்ள பாசம் பற்றி படம் இயக்க உள்ளதாகவும், அதற்கு சூர்யா மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது..
இயக்குனர் சொன்ன கதை மிகவும் பிடித்ததால் மகன் தேவ்வை இப்படத்தில் நடிக்கவைக்க சூர்யா யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆக விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Post a Comment