Header Ads

test

திருகோணமலை கோணேச்சரமும் அமுக்கப்படுகின்றதா?

கிழக்கு துறைமுக நகரமான திருகோணமலை திருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கான மிகப்பெரிய போராட்டத்தை கோயிலின் அறங்காவலர்கள் எதிர்கொள்ளவேண்டியிருப்பதாக தமிழ் நெட் ஆங்கில மொழி இணையம் அம்பலப்படுத்தியுள்ளது.
இலங்கை அரசின் தொல்பொருள் திணைக்களம், இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஆகியவை திருக்கோணேச்சர ஆலயத்தின் புனரமைப்பு பணிகளில் முட்டுக்கட்டைகளை போடுவதாக அறங்காவலர் சபை குற்றஞ்சுமத்தியுள்ளது.
சமீபத்தில், ஒரு பக்தர்களிற்கான மண்டபமொன்றை அமைக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அனைத்து மூன்று அரச நிறுவனங்களாலும் தடுக்கப்பட்டதாக அறங்காவலர் சபையினை சேர்ந்த பரமேஸ்வரன் தமிழ்நெட் ஆங்கில மொழி இணையத்திடம் கூறியுள்ளார்.
"ஆலய வளாகத்தில் பக்தர்கள் மண்டபத்தை விரிவுபடுத்த ஒரு மரத்தை நாங்கள் அகற்றியுள்ளோம். கட்டுமானப் பணிகள் நடைபெறக் கூடாது என்று ஒரு எச்சரிக்கையுடன் தொல்பொருள் திணைக்களம் முதலில் வந்தது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இந்த நடவடிக்கை மலை உச்சியில் பாறை மீது தாக்கத்தை ஏற்படுத்துமென கூறியது.இன்னொருபுறம் கடலோரப்பிரதேசத்தில்; கடலோர அரிப்பு ஏற்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், அறங்காவலர் குழுவின் மற்ற உறுப்பினர்கள் தெற்கிலிருந்து வருகை தந்துள்ளவர்களது தலையீடுகள் பற்றி புகார் அளித்துள்ளனர்.
ஆலய சூழலில் உள்ள 300 பெட்டிக்கடைகள் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக இந்த அதிகாரிகள் எவரும் கவலைப்படவில்லை என அவர்கள் கூறினர்.
பண்டைய சைவ கோவிலை பாதுகாப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதவராக திருகோணமலையில் இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.சம்பந்தன், தொடர்பில் ஆலய அறங்காவலர் சபை தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க அல்லது ஐ.தே.க.வின் கீழ் இந்து விவகாரங்களுக்கான முன்னாள் தமிழ் அமைச்சர்களும், தமிழர்களின் கோயிலுக்கு எதிரான இனவாத பாகுபாடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆலய சூழலை மாசுபடுத்துவதன் மூலமும் ஆன்மிகத்தினை கேள்விக்குள்ளாக்குவதன் மூலமும் இந்து பக்தர்களை  துன்புறுத்துவதற்கு இத்தரப்புக்கள் முற்பட்டுள்ளன.அத்துடன்  கோவிலின் அறங்காவலர் குழுவை பதவி நீக்கம் செய்ய அவை தூண்டியும் வருகின்றன.
தொல்பொருளியல் துறை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் ஆகியவற்றின் திணைக்களங்களில் இருந்து வரும் துன்புறுத்தல், அரச ஆதரவு அமைச்சர் ஒருவரது நேரடி வழிநடத்தலில் கொண்டுவரப்பட்ட வர்த்தகர்களது ஆக்கிரமிப்பென திருக்கோணேஸ்வரம் திண்டாடிவருகின்றது.
திருகோணமலை துறைமுகத்தில் அதன் பூகோள மூலோபாய நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்திய தலையீடு தொடர்கின்றது.எனினும் கிழக்கு மாகாணசபையிடம்; இன ரீதியான பாகுபாடு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை. பி.ஜே.பி ஆட்சி செய்கின்ற தற்போதைய இந்திய அரசு கூட இலங்கை தீவின் மாகாண மற்றும் ஒற்றையாட்சி முறைகளுக்கு இடையில் ஒரு சமநிலையைத் தூண்டுவதில் ஆர்வம் காட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments