இலங்கை

மன்னார் மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட பிரித்தானியா தூதரக அதிகாரிகள்

மன்னார் மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டுள்ளனர் இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அதிகாரிகள். 

இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் சதொச வளாகத்தில் 115வது நாளாக மனித புதைகுழி அகழ்வு நடைபெறுகின்றன.  இந்நிலையில் அவ்விடத்திற்கு திடீரென சென்ற பிரித்தானிய தூதர அதிகாரிகள் இருவர் மனித புதைகுழி அகழ்வுகள் குறித்து நேரடியாகச் சென்ற பார்வையிட்டுள்ளனர்.

மனித எலும்புக்கூடுகளின் அகழ்வு மற்றும் ஏனைய விபரங்களை அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.

இதுவரைக்கும் வரை 266 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கபட்டுள்ளன.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment