சைபர் தாக்குதல்களை முறியடிக்க இராணுவத்தில் புதிய படையணி!
இணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை இராணுவம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மீது மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு இணையத்தள தாக்குதல்களில் இருந்தும், எந்நேரத்திலும் நாட்டை பாதுகாப்பதற்காகவே இந்த படையணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களிலும், இந்த படையணியின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
#Cyber Attack #Sri Lanka Army
No comments