Video Of Day

Breaking News

டிரம்ப் - புதின் பாரிசில் சந்திப்பு!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெறும் முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சியின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

914-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நான்காண்டுகள் நீடித்த முதலாம் உலகப்போர் 11-11-1918 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போர் முடிவடைந்து நூறாண்டுகள் ஆகும் நிலையில் இந்த நாளை நினைவுகூரும் வகையில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு உலகில் உள்ள சுமார் 80 முக்கிய நாடுகளின் தலைவர்களுக்கு பிரான்ஸ் அரசின் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் பாரிஸ் நகருக்கு செல்கின்றனர். அப்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகியோர் நேரடியாக சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

#Vladimir Putin #Donald Trump

No comments