Video Of Day

Breaking News

மோடியுடன் தென்கொரியா அதிபர் மனைவி சந்திப்பு

அயோத்தி தீபவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

நாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார்.

தற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.


#KimJungsook #Modi

No comments