Video Of Day

Breaking News

டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி!!

பாடகி சின்மயி திடீரென டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்து வந்த சின்மயி இனிமேல் டப்பிங் செய்ய முடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து டப்பிங் யூனியன் இணை செயலாளர் ராஜேந்திரன் என்பவர் கூறியபோது, 'சின்மயி டப்பிங் யூனியன்ல இருந்து நீக்கப்பட்டது உண்மைதான் என்றும் அவர் யூனியனுக்கு இரண்டு வருடமாக சந்தா செலுத்தவில்லை என்றும் இதுகுறித்து அனுப்பப்பட்ட கடிதத்துக்கும் எந்த பதிலும் இல்லாததால், அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் யூனியனில் உள்ள எந்த உறுப்பினருக்கும் சந்தா கட்ட நினைவூட்டும் வழக்கம் இல்லை என்றும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் புது வருடத்துக்கான சந்தாவைக் கட்டியாக வேண்டும் என்று உறுப்பினர் அட்டையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

#Chinmayi

No comments