Header Ads

test

கஜாவின் கோரத்தாண்டவம்!

கஜா புயல் தற்போது முழுமையாக கரையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு கடந்த 10ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.


"கஜா" புயல் எச்சரிக்கை காரணமாக 8 மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா தீவிர புயல் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து, 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். இதனால், உள்மாவட்டங்களில் புயல் செல்லும் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சை, நாகை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் காற்று பலமாக வீசத் துவங்கியது. இதனால் வீடுகளின் மேற்கூரைகள் பரந்து செல்லும் அளவிற்கு காற்று பலமாக வீசியது. இதனால் நள்ளிரவில் வீட்டில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

கஜா புயலால் பல இடங்களில் மரங்களும், செல்போன் டவர்களும், மின்கம்பங்களும் முறிந்துள்ளது. இதனைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.கஜா புயல் காரைக்காலில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரை திரும்பிய இடமெங்கும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளன.

கடைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்கள் உள்ளிட்டவைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. மரங்கள் சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் விழுந்து கிடக்கின்றன.

No comments