டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து!
இந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான ஓர் இசை மற்றும் கலாசார அமைப்புடன் இணைந்து டெல்லியில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது ஒரு தாக்குதல் என்று பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பேசிய டி.எம் கிருஷ்ணா கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் அரசியல் உள் அர்த்தங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"நவம்பர் 12 அன்று இந்திய விமான நிலைய ஆணையம் (Airport Authority of India) இந்த இசை நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் அறிவித்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.அப்போது முதலே ட்விட்டரில் என் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது. இவர் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பாடல்களை பாடுபவர், இவரை வைத்து ஏன் இசை நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்," என்றார் அவர்.
"என்னை ஏண்டி-இந்தியன், ஏண்டி-நேஷனல், ஏண்டி-இந்து, அர்பன் நக்சலைட் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தனர். 13ஆம் தேதி இரவு வரை இசை நிகழ்ச்சி நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இருந்தேன். ஆனால், அவசரமான சில காரணங்களுக்காக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக, இந்திய விமான நிலைய ஆணையத்தினரால் அன்று இரவு எனக்குத் தெரிவிக்கப்பட்டது."
Post a Comment