Video Of Day

Breaking News

ஜிம்பாப்வே - பங்களாதேஷ் 143 ஓட்டங்களுடன் சுருண்டது பங்களாதேஷ்!

ஜிம்பாப்வே, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாமில்டன் மசகட்சா, பிரியன் சாரியும் களமிறங்கினர்.

சிறப்பாக ஆடிய மசகட்சா 52 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சியன் வில்லியம்ஸ் பொறுப்பாக விளையாடி 88 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பீட்டர் மூர் 63 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டும், நஸ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வங்காள தேசம் அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாஸ், இம்ருல் கேயஸ் களமிறங்கினர்.

ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வங்காளதேச பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்தனர். ஆரிபுல் ஹக் ஓரளவு தாக்குப் பிடித்து 41 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில், வங்காள தேசம் அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜிம்பாப்வே சார்பில் சதாரா, சிக்கந்தர் ராசா ஆகியோர் 3 விக்கெட்டும், கெய்ல் ஜார்விஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

#Bangladesh vs Zimbabwe  #Bangladesh #Zimbabwe

No comments