113 பெரும்பான்மையைப் பெற்றுவிட்டோம் - மைத்திரி
பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்று விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்ட பேரணியில் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, முன்வைத்த காலை ஒரு போதும் பின் வைக்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸவிற்கு பிரதமர் பதவியை ஏற்கொள்ள அழைப்பு விடுத்திருந்த போதும் அவர்கள் அதனை நிராகரித்தாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்ற முடியாமல் போனதால் மிகவும் தகுதி வாய்ந்த ஒருவரான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த தினங்களில் நாட்டிற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொண்டது ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இல்லை எனவும் ரணில் விக்ரமசிங்கவை சுற்றி இருந்த சிலரே தீர்மானங்களை மேற்கொண்டதாவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
#Mahinda Rajapaksa #Maithripala Sirisena
Post a Comment