இலங்கை

தொடர்கின்றது சிறைகளில் போராட்டம்!

அனுராதபுரம் சிறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுள் ஒருவரான இராபல்லவன் தபோரூபன் உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, அநுராதபுரம் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும், அரசியல் கைதிகள் 55 பேரில்,  ஐவர் சுகயீனமுற்றநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

சுகயீனமுற்ற கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment