இந்தியா

ராகுலை சந்தித்த ரணில்!

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு புது டில்லியிலுள்ள தாஜ் ஹோட்டலில் இன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை இந்தியாவுக்கு சென்றார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து இருநாட்டு உறவுகளின் மேம்பாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதற்கிடையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
இலங்கை பிரதமரின் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment