Video Of Day

Breaking News

மோடிக்கு படம் காட்டிய ரணில்!

இலங்கை ஜனாதிபதி மைத்திரி மீதான கொலை முயற்சி சர்ச்சைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை பிரமதர் மேற்கொண்டிருந்த நிலையில், இந்த இரகசியப் பேச்சுவார்த்தை நேற்று(20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றபோதிலும், என்ன கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

நேற்றைய சந்திப்பின் பின்னர் ரணில் அல்லது மோடி இருவரும் ஊடகவியலாளர்களுக்கு எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே மகாத்மா காந்தி தொடர்பில் சிங்கள கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட காணொலி ஒன்றினை ரணில் சந்திப்பின் போது மோடிக்கு காண்பித்ததாக தெரியவருகின்றது. 

No comments