Header Ads

test

அழுத்தமே விடிவை தரும்:அரசியல் கைதிகள்!


அரசியல் கைதிகளது விடுதலை விவகாரம் அடுத்த கட்ட நகர்வுகளிலேயே தங்கியிருப்பதாக போராட்டத்திலீடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தரப்பில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இன்று அனுராதபுரத்திற்கு வருகை தந்த மாவை சேனாதிராசாவின் வாக்குறுதிகள் தொடர்பில் அரசியல் கைதிகள் பெரிதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

குறிப்பாக அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரசியல் கைதிகள் விவகாரத்தை துருப்புச்சீட்டாக கூட்டமைப்போ அதன் பங்காளிகளோ தயாரா இல்லை.அவ்வாறு வரவு செலவு திட்டத்தை எதிர்த்தால் ஆட்சி கவிழும்,மஹிந்த வருவார் என்ற வழமையான பூச்சாண்டியை இம்முறையும் அவை கைகளில் எடுக்கவே செய்யும்.ஆனால் மறுபுறம் ரணில் அரசுடன் ஒவ்வொரு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பின்வழியாக வைத்திருக்கின்ற உறவு எதிராக வெளியே செல்ல விடாது.இது சிவசக்தி ஆனந்தன் தரப்பிற்கும் பொருந்தும்.

இந்நிலையில் கூட்டமைப்பினர் தமது இரட்டை வேடத்தை கலைத்து நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கடமை பொது அமைப்புக்களிற்கும் பல்கலைக்கழக சமூகத்திற்குமே இருப்பதாக அரசியல் கைதிகள் தரப்பில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரசியல் கைதிகள் தொடர்பில் வெறுமனே ஊடக அறிக்கைகளை விடுத்துவிட்டு அலுவலாக இருக்கின்ற அமைச்சர் அங்கயன் இராமநாதன் முதல் விஜயகலா மகேஸ்வரன்,மனோகணேசன் என அனைவரும் தமது கடமைகளை ஆற்றினால் விடுதலை சாத்தியப்படுமென்பதே அரசியல் கைதிகளது நிலைப்பாடாகவும் உள்ளது. 

No comments