மோடியே நேரடி அழைப்பில் வந்தார்!
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தன்னை கொலை செய்ய இந்திய றோ பிரிவு முற்பட்டதான ஜனாதிபதி மைத்திரியின் குற்றச்சாட்டையடுத்து கெர்ழும்பிலுள்ள இந்திய தூதர் அவரை சந்தித்துள்ளார்.இச்சந்திப்பில் றோவின் மூத்த அதிகாரியொருவரும் பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது.
இச்சந்திப்பின் தொடர்ச்சியாகவே இந்திய பிரதமர் மோடி நேரடியாக மைத்திரியுடன் பேசியதாக தெரியவருகின்றது.
இத்தொலைபேசி வழியேயான உரையாடலை இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவ்வாறான கொலை முயற்சிகள் தொடர்பில் எந்தவொரு குற்றச்சாட்டையும் மைத்திரி வைத்திருக்கவில்லையென மறுதலிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று காலை ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த கெர்ழும்பிலுள்ள இந்திய தூதரிடம் தொடர்புடைய விளக்கத்தை மைத்திரி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஜனாதிபதி என்ற முறையில் மைத்திரி வெளியிட்டுள்ள கருத்துக்கள் பலராலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
Post a Comment