Header Ads

test

கறுப்பு ஆடு யாரு?

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் சர்ச்சை ஏற்பட்டதாக ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய அமைச்சர் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீல. சு. கட்சி தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சரவையில் பிரதமர் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்ததாக ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளியிட்டிருந்தன. இதில் எந்த உண்மையும் கிடையாது.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை இந்தியாவுக்கு கையளிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எத்தகைய அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பில் கடந்த அமைச்சரவையில் கலந்துரையாடப்படவும் இல்லை. உண்மையில் அந்தத் துறைமுகம் தொடர்பில் நானே அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தேன்.
அமைச்சரவையில் இது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அங்கு பிரதமரின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்ததால் சர்ச்சை நிலவியதாகவும் ஐ. தே. க. அமைச்சரொருவரே ஊடகவியலாளரொருவருக்கு செய்தி வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் நம்பிக்கையின் பேரில் அந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. பல பத்திரிகைகள் முன்பக்கத்தில் இச்செய்தி வெளியாகியிருந்தது. அவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்தியை ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய அந்த அமைச்சர் யார் என ஆராயப்பட்டு வருகிறது. அதன் பின்னணியில் செயற் பட்டவர்களுக்கெதிராக விசாரணை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments