Header Ads

test

கூட்டமைப்பின் முடிவு நாளை?


தற்போதைய அரசியல் சூழல் தொடர்பில் நாளை தமிழ் தேசியக்ககூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் ஒன்று கூடி ஆராயுமென மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.புதிய ஆட்சிக்கு ஆதரவளிப்பதா அல்லது இல்லையாவென்பது தொடர்பில் கூட்டமைப்பிடையே குழப்பமுள்ளது.

முன்னர் மஹிந்த தரப்புடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த புளொட் ஆதரவளிப்பதன் மூலம் பேரம் பேசலாமென வாதிட்டுவருகின்றதாக சொல்லப்படுகின்றது.எனினும் டெலோ ,தமிழரசு முடிவெதனையும் எடுத்திருக்கவில்லை.எனினும் பழிவாங்கப்படலாமென்ற அச்சம் இரா.சம்பந்தன்,சுமந்திரனிடையே இருப்பதாகவும் அதனால் ஆதரவளிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்க அவர்கள் சமிக்ஞை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

எனினும் கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசிகள் இன்;றைய ஆட்சி மாற்றத்தின் பின்னர் இரவு முழுவதும் அழைப்புக்களிற்கு பதிலளிக்காத நிலையிலேயேயுள்ளன.

இதனிடையே டக்ளஸ்,தொண்டமான் உள்ளிட்டோர் தமது ஆதரவை வெளிப்படுத்தி அமைச்சுப்பதவிகளிற்கு முன்கூட்டியே பதிவு செய்துவிட்டு காத்திருப்பதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. 

No comments