கொழும்பு கொலை சதி: பின்னணியில் றோ?
சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்வதற்கான சதித் திட்டம், தொடர்பில் அது ஒரு நாடகமாவென்ற சந்தேகம் வலுக்கத்தொடங்கியுள்ளது.கைதான இந்தியர் மனநிலை பாதிக்கப்பட்டவரென செய்திகள் வெளிவந்துள்ளது. எனினும் அவர் இந்திய றோ அதிகாரியெனவும் டெல்லி நிகழ்ச்சி நிரலில் கொலை முயற்சி மூலம் ரணிலை அரியாசனம் ஏற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியெனவும் தெற்னு ஊடகவியலாளர்கள் கருதகின்றனர்.
இதனிடையே இது தொடர்பாக வெளியாகும் தகவல்கள், தாம் நினைத்ததை விட பயங்கரமானதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க.
“இந்தச் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியவரான, நாமல் குமாரவை இந்தியக் குடிமகன் ஒருவர் சந்தித்தார் என்று வெளியான தகவல்களை அடுத்து, படுகொலைச் சதி தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணைகளில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.
நாம் நினைத்ததை விட இந்த சதித்திட்டம் தீவிரமானதாக இருப்பதை காண முடிகிறது. இதில் பலர் தொடர்புபட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தச் சதித்திட்டம் குறித்து ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
அவ்வாறான சதித்திட்டம் தீட்டப்பட்டது உண்மை எனக் கண்டுபிடிக்கப்பட்டால், அதனுடன் தொடர்புடைய அனைவரையும் வெளிப்படுத்த வேண்டும்.
குற்றவாளிகளுக்கு எதிராக காலதாமதமின்றி சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
Post a Comment