Video Of Day

Breaking News

டக்ளஸ்,சம்பந்தன் டெல்லியில்?


இலங்கை அரசிற்கு முண்டுகொடுக்கும் அரசின் குழுவில் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து டெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.

கட்சித் தலைவர்களடங்கிய தூதுக்குழுவில் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவொன்று பயணித்துள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 2010 ஆண்டு அப்போதைய இலங்கை அரசின் தூதுக்குழுவில் பங்கெடுத்து இந்தியாவுக்குச் சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து டெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் மீண்டும் சென்றுள்ளார்.

மீண்டும் சீன ஆதரவு மஹிந்த தரப்பு ஆட்சி பீடமேறலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் டெல்லி நகர்வுகளை ஆரம்பித்துள்ளது.

அண்மையில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் வருகை மற்றும் அமெரிக்க,இந்திய,ஜப்பானிய போர்க்கப்பல்களது வருகை இதன் பின்னணியிலேயே பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது கட்சி தலைவர்கள் டெல்லி அழைக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. 

No comments