Header Ads

test

ஆதரவாக களமிறங்கும் மகசீன் சிறைச்சாலை கைதிகள்?

உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக நாளை புதன்கிழமை மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் ஒருநாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனிடைN அனுராதபுரத்தில் போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழரசு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இன்று சந்தித்துள்ளார்.

உண்ணாவிரதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அரசுடன் பேசி முடிவொன்றை பெற்றுத்தர அவர் இரண்டுநாள் கால அவகாசத்தை கோரியுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னதாக ஒருநாள் கால அவகாசத்தை கோரி சென்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் பின்னர் அரசியல் கைதிகளை திரும்பிக்கூட பார்த்திருக்கவில்லையென அரசியல் கைதிகளது குடும்பங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அரசியல் கைதிகளது உடல்நிலை அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசியல் கைதிகளது குடும்பங்கள் நாளை புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளன.

No comments