வருகின்றார் புதிய அமெரிக்க தூதர்?
சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக பரிந்துரைக்கப்பட்ட அலய்னா பி ரெப்லிட்ஸ்சின் நியமனத்தை அமெரிக்க செனட் அங்கீகரித்துள்ளது.
அமெரிக்க செனட்டினால் இவரது நியமனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து. அலய்னா பி ரெப்லிட்ஸ் சிறிலங்காவுக்கான 17 ஆவது அமெரிக்க தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த துறைசார் இராஜதந்திரியான இவர் இதற்கு முன்னர் நேபாளத்தில் அமெரிக்க தூதுவராகப் பணியாற்றி வந்தார்.
Post a Comment