Header Ads

test

மயிலிட்டிக்கு வருகின்றார் மைத்திரி!


மயிலிட்டி இறங்குதுறைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்காக இலங்கை ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.எதிர்வரும் 22ம் திகதி அவர் வருகை தரவள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஊறணி இறங்குதுறைக்கு அருகில் உள்ள கடற் பிரதேசம் கடந்த தைப் பொங்கல் தினத்தன்று இராணுத்தினரால் விடுவிக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இறங்குதுறையை விடுவிப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த பிரதேசத்தில்  உள்ள நான்கு இறங்குதுறைகளும் தொடர்ச்சியாக இராணுவ கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
காங்கேசன்துறை தல்செவன விடுதி அமைந்துள்ள காணிக்கு அருகாமையில் உள்ளதும் மயிலிட்டிக்கு இடது பக்கமாக உள்ளதுமான ஊறணி கிராமத்தில் ஒரு தொகுதி மக்கள் மீன்பிடி தொழிலையே மேற்கொண்டு வந்தனர். இவர்களுடைய ஒருபகுதி காணிகள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட 454 ஏக்கருடன் விடுவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர் இந்த இடங்களில் மீள்குடியமர்வதற்கு என 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில்  பதிவு செய்துள்ள நிலையில்,
குறித்த மக்களுக்கான வீட்டு திட்டம் எவையும் வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் அங்கு உடனடியாக மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் அவர்கள் மீன்பிடி தொழில் செய்வதற்கு படையினராலும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வலி.வடக்கில் காணிகளினை விடுவிக்க இலங்கை அரசு பின்னடித்துவருகின்ற நிலையில் மயிலிட்டிதுறை முகம் விடுவிப்பு விவகாரத்தை பிரச்சாரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது மைத்திரியின் யாழ்.விஜயம் அமையவுள்ளதாக தெரியவருகின்றது.

No comments