Header Ads

test

போர் வெற்றிச் சின்னங்கள் ஆத்திரமூட்டுகின்றன

இராணுவத்தினரின் போர் வெற்றி சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது. பழைய நினைவுகள் வருகின்றது எனவே அவற்றை அகற்றுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளேன். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வடமாகாண முதலமைச்சர் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை தனது அலுவலகத்தில் சந்தித்த போது , போர் நினைவு சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

போர் நினைவு சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளேன். அந்த நினைவு சின்னங்கள் இராணுவத்தின் மேலாதிக்கத்தை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது என்பதனால் அவற்றை அகற்ற கோரினேன்.

 இது நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்கும் இடையூறாக இருக்கும் அதனால் அவற்றை அகற்ற வேண்டும் என கோரி உள்ளேன். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என தெரியவில்லை. 

நினைவு சின்னங்களை பார்க்கும் போது பல மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது. அந்த காலத்தில் , தமக்கு நடந்த அநியாயங்கள் அவர்களுக்கு நினைவு வருகின்றது.  அது நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எடுத்து கூறி அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளேன் என தெரிவித்தார். 

No comments