Video Of Day

Breaking News

யாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து

ஆவா மற்றும் தனுரொக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின்  விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய், சுன்னாகம் மற்றும் மணிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசங்களில் குறித்த இரண்டு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

சமீபத்திலும் இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments