Video Of Day

Breaking News

வாக்குறுதி வேண்டாம்:தீர்வுடன் வரக்கோரும் கேப்பாபுலவு மக்கள்!

போராட்ட களத்திற்கு வருகை தந்து வாக்குறுதிகள் வழங்குவதை விட செயலில் காண்பிக்குமாறு கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் அரசின் பிரதி அமைச்சரான அங்கஜன் இராமநாதனை திருப்பியனுப்பியுள்ளனர்.

முல்லைத்தீவு கோப்பாப்புலவு பிரதேசத்தில் இலங்கைப் படையினரால் அபகரிக்கப்பட்ட தமது பாரம்பரியக் காணிகளை விடுவிக்;குமாறு கோரி கடந்த 500 நாட்களிற்கு மேலாகப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் போராட்டத்தினை விஸ்தரிக்க முற்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலமீட்பு போராட்டம், இன்று ஐநூற்றிப் 18 ஆவது நாளாக கோப்பாப்புலவு பிரதேசத்தில் உள்ள இலங்கை இராணுவ முகாமிற்கு முன்பாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 

மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களினால், இலங்கை இராணுவம் அபகரித்து வைத்துள்ள காணிகளில் சில பகுதிகளை பொதுமக்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.

அப்பொழுதே வாக்குறுதிகள் வழங்குவதை விட செயலில் காண்பிக்குமாறு அரசின் பிரதி அமைச்சரான அங்கஜன் இராமநாதனை திருப்பியனுப்பியுள்ளனர்.அத்துடன் மற்றொரு புதிதாக பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுள்ள காதர் மஸ்தானிடமும் இதே கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

No comments