இரணைமடுவில் விமான நிலையம்
கிளிநொச்சி- இரணைமடுவில் உள்ள விமான ஓடுபாதை, உள்நாட்டு விமான தளமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம், யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட வளாகத்தில் உள்ள கட்டடத் தொகுதிகளை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு அபிவிருத்தியின் போது, இரணைமடு விமான ஓடுபாதை, மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி என்பனவற்றில் கவனம் செலுத்தப்படும்.
காங்கேசன்துறையில் விரைவில் கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்படும். அதற்கான காணிகள் விரைவில் ஒதுக்கப்படும்.
மன்னார்- வவுனியா- திருகோணமலை வீதியை அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கில் தொழில்துறை அபிவிருத்தியின் மீது அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment