மகிந்தவின் கட்சிக்கு சீன கம்யூனிஸ்ட் ஆதரவு
மேலதிக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின், அனைத்துலக உறவுகள் திணைக்கள உதவி அமைச்சர் கோ யிசோ, நேற்று முன்தினம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், சிறிலங்கா பொது ஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிசையும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரி பாராட்டினார் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான உறவுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலுப்படுத்திக் கொள்ளவும், விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
Post a Comment