Video Of Day

Breaking News

முகமாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மாணவனின் மணிக்கட்டுக் கை துண்டிப்பு

நேற்று முற்பகல் முகமாலை தெற்கு, கோவானம் காட்டுப்பகுதிக்குச் சென்ற வேலி அடைப்பதற்கென கட்டை வெட்டுவதற்காகச் சென்ற வேளை அங்கிருந்த மர்மப்பொருள் வெடித்ததில் சிறுவன் தனது மணிகட்டுக்கு கீழான கை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தில் எழுதுமட்டுவாளைச் சேர்ந்த 18 வயதுடைய ஜெயபாலன் நிதர்சன் என்ற மாணவனே கையை இழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயத்துடன் மாணவன் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த வெடிவிபத்தில் மாணவனின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments