Video Of Day

Breaking News

வடக்கு கிழக்குக்கு பிரித்தானியா ஒரு மில்லியன் பவுண் நன்கொடை

வடக்கு, கிழக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக் குடியேறியுள்ள 600 குடும்பங்களின், அடிப்படை உட்கட்டமைப்பு சேவைகளுக்காக பிரித்தானிய ஒரு மில்லியன் பவுண்ட்களை கொடையாக வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் மீளக் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான, வீதிகள் புனரமைப்பு, கிணறுகளை அமைப்பது, சுகாதார சேவைகள் போன்றவற்றுக்கு இந்த கொடை பயன்படுத்தப்படும்.

அத்துடன், மீளக்குடியேறிய குடும்பங்களின் வாழ்வாதார உதவிக்கான, சிறிய வணிக முகாமைத்துவ பயிற்சி மற்றும் விவசாய, மீன்பிடி கருவிகளை வழங்குவதற்கும் இந்தக் கொடை பயன்படும்.

சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான பிரித்தானியாவின் பங்களிப்பாகவே இந்தக் கொடை வழங்கப்படவுள்ளது.

No comments