வீடமைப்பு தாமதத்திற்கு காரணமா? மனோ மறுப்பு!
வடக்கில் கிழக்கில் கடந்த மூன்று வருடங்களாக, இதோ வருகின்றதென சொல்லிக்கொண்டிருந்த வீட்டுத்திட்டம் பெயரளவில் இருக்கின்றது. ஆனாலும் ஒரு வீடுதானும் கட்டப்படாமல் வீட்டுத்திட்டம் படு தாமதமடைந்து கைகூடாமல் இருக்கிறதென அரச அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் விPடமைப்பு திட்டம் இழுபறிபட்டு செல்வதற்கும் தனக்கும் தொடர்பில்லையென தெரிவித்துள்ளதென அவர், உண்மையில் அமைச்சரவையில் இந்த தாமதம் பற்றி வடகிழக்கு தமிழ் உடன்பிறப்புகள் சார்பாக அடிக்கடி குரல் எழுப்புவதே நான்தான் என தெரிவித்திருந்தார்.
உண்மை இப்படி இருக்கும்போது, கடந்த வாரம் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் இருந்த தெளிவின்மை சம்பந்தமாக ஒரு விளக்கம் கேட்டிருந்தேன். இதை சரியாக புரிந்து கொள்ளாமல் தன் மீது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் பத்திரிகை அபாண்டமான பொய்யை தலைப்பு செய்தியாக பிரசுரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான வீடமைப்புத்திட்டம் இலங்கை ஜனாதிபதியால் தற்போது மனோகணேசனின் நல்லிணக்க அமைச்சிடம் கையளிப்பட்டுள்ளது.இந்நிலையில் தமது அரசியலை வீடமைப்பு திட்ட ஒதுக்கீட்டின் ஊடாக முன்னெடுக்க தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.இதனையடுத்து மனோகணேசனின் மீது தற்போது சேறடிப்பதில் தமிழரசுக்கட்சி முனைப்பு காட்டிவருகின்றமை தெரிந்ததே.
Post a Comment