Header Ads

test

மாணவர்களை வாழ்த்திய கல்வி அமைச்சர்!

பதற்றமின்றி தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு தோற்றி வெற்றியடையுங்கள்' என வடக்கு மாகாண கல்வி அமைச்சு நாளை நடைபெற இருக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, மகாண கல்வித்திணைக்களம், வலய கல்வித் திணைக்களங்களங்கள் மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள் சார்பில் இந்த வாழ்த்துச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வாழ்த்துச்செய்தி வருமாறு....

'நாளை 5ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப் பரசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன்,ஒரு குழந்தையின் வாழ்வின் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஆதாரமாக புலமைப்பரிசில் பரீட்சை அமைவதில்லை. இந்தப் பரீட்சை முடிவடைந்தபின் அடுத்து வரும் ஆண்டுகளில் உங்கள் ஒவ்வொருவரின் விடாமுயற்சியும்,கல்வியில் மேல் நிலைக்கு வரவேண்டும் என்ற ஊக்கமும் உங்கள் ஒவ்வெருவரையும் இந்த நாட்டின் ஆற்றல் மி;க்க பிரஜைகளாக உருவாக்கும். 

நாளை நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சை உங்களுக்குக் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்;படுத்தும் என்று நாங்கள் நம்புகின்றோம். பதற்றமின்றி தன்னம்பிக்கையுடன் தோற்றி வெற்றியடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்த நாட்டின் அற்றல் மிக்க பிரஜைகளாக வளர எங்கள் வாழ்த்துக்கள்.' இவ்வாறு வட மாகாணக் கல்வி அமைச்சர்; கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் குழந்தைகளுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவி;ததுள்ளார். வடமாகாணக் கல்வி அமைச்சு,வடமாகாணக் கல்வித் திணைக்களம்,வலயக் கல்வித் திணைக்களங்கள்; மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள் சார்பில் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

என அந்த வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments