Header Ads

test

கல்விக்கு உதவாத கல்வியமைச்சர் !


வடக்கு மாகாண கல்வி அமைச்சு பாதிக்கப்பட்ட மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்று சுற்றம் சுமத்தியுள்ள கணேஸ் வேலாயுதம், அம் மாணவர்களுக்கு கிடைக்கும் உதவிகளையும் தட்டிக் களிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.கிறீன் கிராஸ் கோட்டலில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

வடக்கு மாகாணத்தில் 20 வீதமானவர்கள் அடிப்படை கல்வி அறிவு (எழுதப் படிக்க) அற்றவர்களாக காணப்படுகின்றார்கள். அவர்களின் கல்வித் தேவை உடனடியாக நிறைவு செய்து கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் வாள் தூக்கும் கலாசாரம்தான் இங்கு அதிகரிக்கும்.
எனது நிதியில் இருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி சங்கானையில் 33 மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் நடத்தியிருந்தோம்.

ஆனால் அதனை நடத்த விடாது வடமாகாண கல்வி  அமைச்சு தடுத்து விட்டது.
அதற்கு என்ன காரணம் என்று கோரி கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை எழுதியிருந்தேன். அதற்கான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை.  அந்த மாணவர்களுக்கு இதுவரை மேலதிக வகுப்புக்களும் வழங்கப்படவில்லை.

கல்வி அமைச்சரை சந்திப்பதற்கும் முயட்சிகளை மேற்கொண்டிருந்தேன். அதற்கும் கல்வி அமைச்சர் வாய்ப்பு தரவில்லை. இவ்வாறு வடமாகாண கல்வி அமைச்சு மாணவர்களின் கல்வி தேவையினை தானும் நிறைவேற்றாமல், செய்பவர்களுக்கும் தடை விதித்து வருகின்றது என்று வருத்தம் வெளியிட்டார்.

No comments