மகிந்தவின் அவிழ்ந்த முகமூடி?
மகிந்த தனது முக்கிய பிரச்சார உதவியாளரான நாடாளுமன்ற உறுப்பினொருவரை ஊடகங்கள் மத்தியில் அவமதித்த விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. அவ்வாறு மோட யகெக்நே மே.....அன்ன எகாட்ட வெலா இன்னவா" என எறிந்து பேசியது யாரை எனத் தெரியுமா? மகிந்தவின் அனைத்து நல்லது கெட்டது அனைத்தையும் செய்யும் உதித்த லொக்கு பண்டராவுக்குத்தான்.
“மோட யகெக்நே மே அன்ன எகாட்ட வெலா இன்னவா" என்றால் தமிழில் "மோட்டு பேயன் இவன், அந்த பக்கத்தில போய் நில்லு" என்பதாகும். இவர் பதுளை மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். இவரது தந்தை முன்னாள் சபாநாயகர் ஏ. லொக்குபண்டார.
மகிந்தவின் அனைத்து நல்லது கெட்டது அனைத்தையும் தனது உடலில் கொட்டி கழுவும் ஒரு நபர்தான் உதித்த. உதித்த ஊடகங்கள் முன்னராக மகிந்தவால் மிக அவமானத்துக்கு உள்ளானார். சாதாரணமாகவே மகிந்த இருந்த மூட் என்ன என்று தெரியவில்லை. மகிந்தவோடு எல்லோரும் எல்லா நேரமும் பேசப் போகக் கூடாது. மீடியா முன்னால் என்பதால் இதோடு நிறுத்திக் கொண்டார். இல்லாவிட்டால் வீட்டில் உள்ள அனைவரையும் நினைவுக்கு கொண்டு வந்து கை வைத்து விடுவார். இதை பழகிய அனைவரும் அறிவர். கமே சண்டியா அதாவது ஊர் சண்டியன் தன்மைதான். கோபம் வந்தால் பக்கத்தில் உள்ள பொருட்கள் கூட மிஞ்சாது. உடைந்து நொறுக்கும்.
சீஐடியினரின் கேள்வி கணைகளால் துளைத்தெடுக்கப்பட்ட மகிந்த ஆவேசத்தோடு வெளியே வரும் போது தனது கோபத்தை காட்டக் கிடைத்த நபராக உதித்தவை சொல்லலாம். தனது சேறுகளை கழுவும் இவருக்கே இப்படி என்றால் அவரை தெரியாமல் அவர் சார்பாக வாதிடும் மற்றவர்களுக்கு எப்படி என கேட்கவா வேண்டுமென தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment