Video Of Day

Breaking News

வவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது?

வவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைதாகியுள்ளார்.குறித்த கட்சி சார்பில் அடுத்துவரும் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் இக்கைது நடந்துள்ளது.

பெண்ணொருவரது முறைப்பாட்டின் அடிப்படையில் இக்கைது நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் கைதுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இதனிடையே தமிழீழ விடுதலை இயக்கமெனும் டெலோ அமைப்பிலிருந்து வெளியேறி உதயகுமார் என்பவர் தலைமையில் சிறீடெலோ அமைப்பு செயற்பட்டுவருகின்றது.

முன்னைய மஹிந்த அரசில் அரசுடன் நெருங்கி செயற்பட்ட சிறீடெலோ அமைப்பு கடந்த உள்ளுராட்சி தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments