Header Ads

test

மனோவிடமிருந்து வீடமைப்பு பறிப்பு:பின்னால் கூட்டமைப்பு?

தலைப்பைச் சேருங்கள்
அரச தமிழ் அமைச்சரான மனோ கணேசனிடமிருந்து வீடமைப்புத்திட்டங்களை பறிப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை மும்முரமாக இருந்துவந்தமை அம்பலமாகியுள்ளது.

மனோ கணேசனிடமிருந்து குறித்த வீடமைப்பு திட்டத்தை பறிமுதல் செய்து மற்றொரு அமைச்சரான சுவாமிநாதனிடம் ஒப்படைக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்மந்தன், ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். 

அதில் வடக்குக் கிழக்கில் வீடமைப்பு, வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை மனோ கணேசனிடம் வழங்க வேண்டாம். அதை மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பிலே வழங்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் பொறுப்பில் ஒப்படைக்கவும் அதனை பிரதமருடைய பணியகத்தின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் வைத்திருக்க வேண்டும் என்றும் இரா. சம்மந்தன் கோரியிருந்தார்.

இதனிடையே மனோ கணேசனின் கையிலிருந்து இவற்றினை சுவாமிநாதனுக்கு மாற்றுவதற்கான வலுவான காரணங்கள் எதையும் இரா.சம்மந்தன் முன்வைத்திருக்கவில்லை.

அரச அமைச்சர் மனோகணேசன் தொடர்பில் வடகிழக்கு மக்களிடையே ஓரளவு நல்லெண்ணம் உள்ளது.இந்நிலையில் வீடமைப்பு திட்டத்தை மனோகணேசன் முன்னெடுத்தால் அவருக்கு ஏற்படக்கூடிய மக்கள் ஆதரவு புலத்தை கூட்டமைப்பு விரும்பவில்லை.

இதன் தொடர்ச்சியாக தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் பத்திரிகை தொடர்ச்சியான பிரச்சாரங்களை அவர் மீது முன்னெடுத்திருந்தது தெரிந்ததே.

No comments