Header Ads

test

மகேஸ் சேனநாயக்க சொந்த வேலையினை பார்க்கட்டும்:சர்வேஸ்வரன்


இலங்கை தீவிலுள்ள அனைத்து கோட்டைகளும் இலங்கை இராணுவத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லையென வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவம் யாழ்ப்பாண கோட்டையினை உரிமை கோருவதாக இலங்கை இராணுவத்தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண கோட்டையினை இலங்கை இராணுவம் உரிமை கோருவதாக அண்மையில் வெளியான அரசினது அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றிற்கு வட மாகாண  கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன்  வழங்கியுள்ள செவ்வியில் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க தனது சொந்த வியாபாரத்தை பார்க்கவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் விவகாரத்திலும் மற்றும் வடகிழக்கு சிவில் விவகாரங்களிலும்  தலையிடுவதை கைவிடவும் அவர் மகேஸ் சேனநாயக்கவிடம் கோரியுள்ளார்.

இலங்கையின்; முப்படைகளாலும் பிரதிநிதித்துவம் செய்யப்படும் இராணுவ கட்டமைப்பினை தமிழ் மக்கள் ஆக்கிரமிப்பு சக்தியாகவே கருதுகின்றனர்.

இது இலங்கை இராணுவம் என பெயரிடப்பட்ட போதிலும், இது பெரும்பாலும் சிங்கள இராணுவம் மற்றும்; ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமெனவே தமிழ் மக்களுடைய மனதில் இருப்பதாகவும் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே, யாழ்ப்பாண கோட்டையில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தால், தமிழ் மக்கள் அதைப் பார்வையிட மாட்டார்கள், என அவர் வாதிட்டுள்ளார். 

இதனிடையேதென்னிலங்கையிலுள்ள கோட்டைகளை உரிமை கோராத இராணுவம் யாழ்ப்பாணம் கோட்டையினை மட்டும் ஏன் உரிமை கோருகின்றதென கேள்வி எழுப்பியுள்ள அவர் காலி கோட்டையில் அரச அதிபர் அலுவலகமென்பவை இயங்குவதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

No comments