Header Ads

test

வைத்தியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவான புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி இன்றைய தினம்(10) யாழில் வைத்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்த போதும் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டமையால் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக வடமாகாண மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு உரிய வகையில் வைத்தியர்கள் நியமிக்கப்படவில்லை. அத்துடன் இங்கு நீண்டகாலம் சேவையிலுள்ளவர்களுக்கும் உரிய காலப் பகுதியில் இடமாற்றம் வழங்கப்படுவதில்லை. இதனால், வைத்தியர் பற்றாக்குறை நீண்டகாலமாக நிலவி வருகிறது.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கும், அமைச்சுக்கும் அறிவித்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை முழுமையாக நிவர்த்தி செய்யக் கோரி இன்று(10) வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை,கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டமையால் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக வடமாகாண மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது ஒழுக்காற்று விசாரணை துரிதப்படுத்தப்படாதவிடத்து மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டி வருமெனவும் அந்தச் சங்கம் மேலும் எச்சரித்துள்ளது

No comments