Header Ads

test

வடமாகாணத்தில் ஆசிரிய நியமனம்!


வடமாகாணசபையின் கீழுள்ள பாடசாலைகள் மற்றும் அமைச்சுக்கள் திணைக்களங்களில் 7ஆயிரம் பட்டதாரிகளிற்கான வெற்றிடமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.இவ்வெற்றிடங்களை நிரப்புவதில் வடமாகாணசபை அதிகாரிகள் அக்கறையற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனினும் நியமனம் செய்யப்படும் பட்டதாரிகளிற்கான சம்பளக்கொடுப்பனவு மத்திய அரசினாலேயே வழங்கப்படுகின்றது.அவ்வாறு வழங்கப்பட மத்திய அரசின் ஆளணி பிரிவே அனுமதி வழங்கவேண்டும்.ஆனால் ஆளணி அனுமதிப்பிரிவு அனுமதிகளை வழங்காது இழுத்தடிப்பதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே வடமாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும்பொருட்டு 194 புதிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சு மண்டபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

நியமனக்கடிதங்களை வழங்கி வைக்க அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்,எதிர்கட்சி தலைவர் தவராசா ஆகியோர் முதலமைச்சர்,கல்வி அமைச்சர் சகிதம் பங்கெடுத்திருந்தனர்.  

No comments