Video Of Day

Breaking News

கைதிகள் தப்பி ஓட்டம்

முல்லைத்தீவு நீதிமன்ற சிறைச்சாலை கட்டத்தில் இருந்து நான்கு கைதிகள் இன்று தப்பி ஓடியுள்ளனர் என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி, கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை முல்லைத்தீவு நகர் கள்ளப்பாட்டு உள்ளிட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூன்று குற்றவாளிகளும், கொலைக்குற்றவாளியும் இன்று விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கொண்டு வரப்பட்டனர்.

இவர்கள் விசாரணைக்காக நீதிமன்ற சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்ட வேளை தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments