Video Of Day

Breaking News

வடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை!

வடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்.மொழிகள் விவகார அமைச்சர் மனோகணேசனிடம் இத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக வடக்கின் எல்லைக்கிராமங்களிலும் யாழின் தீவகப்பகுதிகளிலுமுள்ள தமிழ் மக்களது பூர்வீக கிராமங்கள்,மற்றும் வீதிகளிற்கு சிங்கள பெயர்களை சூட்டுவதில் படையினரும் பௌத்த பிக்குகளும் முனைப்பு காட்டிவருகின்றனர்.

இந்நிலையிலேயே தமிழில் பெயர்களை வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு சூட்டவேண்டுமென்ற கோரிக்கையினை முதலமைச்சர் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சர் அமைச்சிலிருந்து கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனோகணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments