இலங்கை

ஆளும் வளரல! அறிவும் வளரல!!யாழ்ப்பாணம் மாநகரசபையின் 2ஆம் வட்டார உறுப்பினர் தர்சானந் பெரும் குழப்பவாதியாக சபை உறுப்பினர்களால் கணிக்கப்பட்டுவரும் நிலையில் இன்றைய அமர்வில் தொடர்ச்சியாக ஏனைய உறுப்பினர்களின் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

யாழ் மாநகரசபையின் அமர்வுகள் நடைபெறும்பொது ஒவ்வொருவரது உரையின் போதும் பிரேரணையின்போதும் அதற்கு தனது பதில் வழங்கப்படவேண்டும் என்பதற்காக சம்பந்தமற்ற கதைகளைக் கதைத்து சபை அமர்வுகளை தர்சானந் குழப்பிவருகிறார்.

இன்றைய அமர்வில் ஈபிடிபி உறுப்பினர்களை தர்சானந் வம்பிற்கு இழுத்தநிலையில் ஈபிடிபி உறுப்பினர் றெமீடியசினால் கடுமையாக வாங்கிக்கட்டிக்கொண்டார். மருந்தடித்த பழங்களை விற்பனை செய்வது தொடர்பில் முன்னாள் முதல்வரும் ஈபிடிபியின் மாநகர உறுப்பினருமான ஜேகேஸ்வரி பற்குணராஜா முன்வைத்த கோரிக்கையின் மீதான விவாதத்தை திட்டமிட்டுக் குழப்புவதற்கு தர்சானந் முயன்றபோது ஆள்தான் வளரவில்லை என்றுபார்த்தால் அவர் தெரிவிக்கின்ற கருத்துக்களும் அறிவுபூர்வமானதாக இல்லை. நீங்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களை கருத்துத் தெரிவிக்கவேண்டும் என்பதற்காக கருத்துத் தெரிவிக்காது அறிவுபூர்வமாகச் சிந்தித்துக் கருத்துக் கூறுங்கள் என றெமீடியஸ் தெரிவித்தார்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment