மன்னாரில் 1,500 பனைகள் நாசம்!
மன்னார் மாவட்டத்தின் ஓலைத் தொடுவாய் பகுதியில் ஆயிரத்து 500 பனைகள் தீயில் எரிந்து நாசமாகியது.
தீப்பற்றியதை அடுத்து, மக்களும் மாவட்டத்தில் இருந்த படையினரும் பல மணிநேரம் தண்ணீர் பவுசர்களின் துணையுடன் தீயைக் கட்டுப்படுத்த போராடினர்.
ஆனாலும் சுமார் 1500 பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன. பனைகள் மூலம் பரவிய தீ இறுதியில் இரு வீடுகள் மீதும் பரவியது. இறுதியில் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே தீ அணைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment