Header Ads

test

மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி படுகொலையாகி 12 ஆண்டுகள்

ஈழத்துக் கலைஞர் மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
04-08-2006 அன்று ஈழத்துக் கலைஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் அரச ஏவல் கூலிகளால் யாழ்ப்பாணத்தில் வைத்து 

சுட்டுக் கொல்லப்பட்டார்.எழுத்தாளர்களை கொல்வதால் விடுதலை சார் சிந்தனைகளை முடக்கி விடலாம் என்ற சிங்கள பேரினவாத அரசின் திட்டத்தின் கீழ் அநியாயமாக கொல்லப்பட்ட ஒரு தேசிய சமூக எழுத்தாளர் இவராவார்.தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து 

வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர்.பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் வைகறை, இலங்கை மண் , "பொன் பரப்பித்தீவு" ஆகிய வானொலி தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார். விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன்.கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன.தமிழின உணர்வு எழுச்சியூட்டும் சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். "வரலாறு சொல்லும் பாடம்" என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார்."மண்ணுக்காக" என்ற முழுநீள திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார்.

ஈழத்தின் வடபுலத்தில் கவிஞர் மிகப்பிரபலமானவர்.புலிகளின்குரல் வானொலியில் 90 இல் ஒலிபரப்பான இவரது படைப்பான'இலங்கைமண்'என்ற இராவணனைக் கதாநாயகனாகக் கொண்ட நாடகம் இன்றும் அனைவரது மனத்தில் நிற்க்கும்.
அதை பின் நாட்டுக்கூத்து வடிவமாக்கினார்.
இதைவிடவும் பலமேடை நாடகங்களை இயக்கியவர்.பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் என்று பல கலைவடிவங்களில் மிளிர்ந்தவர்.
பல படைப்புக்களை வெளியிட்டவர்.
இனந்தெரியாத நோயில் அவதிப்பட்டு வன்னியில் இறந்துபோன தன்னுடைய இரண்டாவது மகனான மதனரதனின் சம்பவத்தைக் கொண்டு அவர் எழுதிய இறுதிநாவல் எடுக்கவோ தொடுக்கவோ? உருக்கமானது.

இதைவிட விடுதலைப்போராட்டத்துக்கென  பல தாயக பாடல்களை எழுதியளித்துள்ளார்.
1.தமிழீழ மொட்டுக்கள்
2.செஞ்சோலை
3.சூரியப் புதல்விகள்
4.கடற்கரும்புலிகள் பாகம்-4
5.கடற்கரும்புலிகள் பாகம்-5
இன்னும் பல தாயக பாடல்களை எழுதியவர்.
இவருடைய மூன்றாவது மகன் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாயிருந்து 1996 இல் யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்தவர்.
விடுதலைக்காக நிறைவான பணியாற்றியவர் பொன் கணேசமூர்த்தி.
பொன் கணேசமூர்த்தியின் நெறியாள்கையில் உருவான பிரபலமான மேடை நாடகங்கள்;
1. இரட்டை முகங்கள்
2. சந்தன கட்டைகள்
3. சந்தனக்காடு
வில்லிசை, உரைவீச்சு உட்பட்ட பல்வேறுபட்ட வானொலி நிகழ்ச்சிகளை படைத்திருந்த இவர் பெருமளவிலான
விடுதலைப் பாடல்களையும் உருவாக்கியுள்ளார்.வானொலி, அரங்க திரைப்பட நடிகனாகவும் செயற்பட்ட இவர், பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.இவர் ஓகஸ்ட் 4, 2006 இல் யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத அரச ஏவல் கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள்:
தூரம் தொடுவானம் (நாவல்)
துளித்துளி வைரங்கள் "Droplet Diamonds" (தமிழ்-ஆங்கில கவிதைத் தொகுதி)
எடுக்கவோ தொடுக்கவோ (கவிதைத்தொகுதி)
இலங்கை மண் (நாடகம், 2008)
"துளித்துளியாய்.." (நாவல்)
பன்முகப்பட்ட கலை இலக்கிய பணியாற்றி விடுதலை பாதையில் உளியாக திகழ்ந்த இவரை வரலாற்று பத்திரப்படுத்தியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்தி அவர்களுக்கு தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் மார்ச் 15, 2008 இல் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தார்

No comments