கறுப்பு யூலை - கனடா
ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார்.
ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழமை (ஜுலை 25ம் திகதி) மாலை 6.30 மணிக்கு இடம்பெறும் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். இவர் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் இருந்து மீண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை வெளி உலகிற்கு 'புள்ளிகள் கரைந்தபொழுது' என்ற நாவலின் ஊடாக தமிழீழத்தில் வெளியிட்டு, கனடாவில் வெளியிட இருக்கின்றார்.
இவருடைய படைப்பில் இதுவரை பல நாவல்கள் மற்றும் கவிதை தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றது. ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு, முரசொலி உள்ளிட்ட யாழ் பத்திரிகைகளிலும் வெளிச்சம், சிரித்திரன், அமிர்தகங்கை, ஜீவநதி, எரிமலை, காற்றுவெளி உள்ளிட்ட இன்னும் பல சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார்.
1990 ம் ஆண்டிலிருந்து 2009 வரை தமிழீழ தேசிய வானொலி மற்றும் தமிழீழ தொலைக்காட்சியில் இவருடைய படைப்புக்கள் பல வெளிவந்திருக்கின்றன. இவர் தமிழ் தேசியத்தின் உச்ச விருது பெற்ற ஒரு கலைஞர்.
இவருடைய தாயகப்பாடல்கள் பல இசைத்தட்டுகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய 'விழிமடல் மூடி துயில்கின்ற வீரரே......' என்ற பாடல் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டது.
இன்றும் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கும் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களுடைய கறுப்பு ஜூலையில் நிகழ்த்தவிருக்கும் பேச்சு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என கனடியத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Post a Comment