Header Ads

test

மீண்டும் மன்னார் முள்ளிக்குள மக்கள் போராட்டம்!


கடற்படை வசமுள்ள தமது குடியிருப்புக்களை விடுவிக்க கோரி இன்று 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் அடையாளப்போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

மன்னார் முள்ளிக்குளம்.கிராமத்தில் தமது பூர்வீக இடத்தில் உள்ள தமது வீடுகளில் கடற்படையினரின் குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்களை வெளியேற்றி தமது வீடுகளை விடுவிக்கும் நோக்குடன் முள்ளிக்குளம் மக்கள் தமது காணி வளாகத்திற்கு முன்னதாக கூடாரங்களை அமைத்து தங்கள் பூர்வீக நிலத்தினை மீட்பதற்காக அமைதி வழியிலான போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக தாம் வாழ்ந்த இடங்கள் தமக்கு வேண்டும் என்று போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் எமது இடத்தை 8 மாதத்துக்குள் விடுவதாக கூறி போராட்டத்தை கைவிடச்செய்தனர்.ஆனால் இன்று வரைக்கும் எமது வீடுகளை விடுவிக்கவில்லை. அதனால்; தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது வீடுகளுக்கு முன்னால் உள்ள சிறு பற்றைகளை அகற்றி சிறு கூடாரம் அமைத்து போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.


No comments