நியூயோர்க் ரைம்ஸ் இதழுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச, முடிந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் அஜித் பெரேரா.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவிடம் இருந்து பணம் பெறவில்லை என்று, சீனா நேரடியாகத் தெரிவிக்கவில்லை.
நியூயோர்க் ரைம்ஸ் இதழின் குற்றச்சாட்டுகள் பொய்யானால், மகிந்த ராஜபக்ச அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அவர் தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 Comments :
Post a Comment