யாழ் கோட்டைய இராணுவத்திடம் கொடுக்காவிட்டால் போதையை ஒழிக்க முடியாதாம் - ஆளுநர் புது விளக்கம்
யாழ் கோட்டையில் இருந்து இராணுவத்தை நீக்கவேண்டும் என்ற முதலமைச்சரின் கருத்துக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,
யாழ்ப்பணம் ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினர் நிரந்தரமாக முகாமிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் யாழ்ப்பணத்தில் தற்போது இராணுவத்தை நீக்கச் சொல்கின்றார்கள், அவர்கள் அங்கிருந்து சென்றால் நாட்டுக்குள் வரும் போதை பொருட்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது.
போதைப்பொருள் கடத்தலில் எமது நாடு கேந்திர நிலையமாக இருக்கும் போது அதனை முறியடிக்க இராணுவம் வேண்டும் என அவர் கூறினார். இந்நிலையிலேயே அமைச்சரவை புதிய தீர்மானம் ஒன்றினை எடுத்து அவர்களுக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
அத்துடன் யாழ்ப்பாண கோட்டையில் ஒல்லாந்தர், போத்துக்கேயர், ஆங்கிலேயர் பின்னர் விடுதலைப்புலிகள் அதன் பின்னர் இராணுவம் நிலை கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment